பக்கத்து வீட்டார்கள் ரொம்ப தொல்லை பன்னுறாங்க., எல்லா விடயத்திலும். பொறுமையா எவ்வளவோ இருந்திட்டோம்.?என்ன. பண்ணலாம்.?

 


பக்கத்து வீட்டார்கள்  ரொம்ப தொல்லை பன்னுறாங்க.,

எல்லா விடயத்திலும்.

பொறுமையா எவ்வளவோ  இருந்திட்டோம்.?என்ன. பண்ணலாம்.?


🌹பதில்🌹


    அண்டை வீட்டுக்காரர்களுடன் நெருக்கமாக இருப்பதை இஸ்லாம் குரானிலும்,ஹதீஸிலும் மிகவும் வலியுறுத்தி கூறபட்டுள்ளது.


அண்டைவீட்டார்கள் தொடர்ந்து தொல்லைகொடுத்தாலும் நாம் பொறுமையை கடைபிடித்தாக வேண்டும் என்றுதான் இஸ்லாம் வழிகாட்டுகிறது.,

அவர்கள் செய்யும் நன்மைக்கும்,தீமைக்கும் அவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் பொறுப்பாளி.,


நாம் அவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள பொறுமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும்.


அவர்களிடம் சமாதானம் பேச முன்வர வேண்டும்.

அப்பொழுதும் அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அமைதியாக விலகிவிடுவதே சிறந்தது.


உங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான ஆட்களை வைத்து இஸ்லாம் கூறிய அறிவுரைகளை எத்திவைக்க முயற்சி செய்யுங்கள்.


ஏனெனில், நாம் பழிவாங்கவோ,சண்டையிடவோ இஸ்லாம் நமக்கு கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்விடத்தில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக இருப்பதுதான் சிறந்த ஒன்று.


ஏனெனில், நாம் பழிவாங்கவோ,சண்டையிடவோ இஸ்லாம் நமக்கு கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்விடத்தில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக இருப்பதுதான் சிறந்த ஒன்று.


அவர்களது தொல்லைகளை பொறுத்து கொண்டால் அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்.


அவர்களுடைய தவறை நாவால் தடுக்க முயற்சியுங்கள்.,தடுக்கமுடியாவிட்டால் மனதால் தடுத்து விலகிவிடுங்கள்.,

அவர்கள் செய்த தவறை குறைகூறி நாமும் குறைகூறும் பாவத்திற்கு ஆளாவதிலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்வோம்.


தொடர்ந்து அவர்களுக்கு அவர்களின் தவறை உணரவைக்க முயற்ச்சியுங்கள்,இன்ஷா அல்லாஹ்


அண்டைவீட்டார் என்று வரும்போது சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். அதைபெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு வாழ்நாள் பகைவர்களாக மாறிவிடாதீர்கள்!அவர்கள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு அவருக்கு சரியான அறிவுரைகளைக்கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.


📚📖ஆதாரங்கள்


ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோஅவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு,சாவுக்குபோதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:ஹாகிம் 2446)


📙ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டைபதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றுஅபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ”என்ன இது! உங்களை இதை (நபிகளாரின்கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின்மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­க்கொண்டேயிருப்பேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்:புகாரீ (2463)


📙”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைகண்ணியப் படுத்தட்டும்!”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)நூல்: புகாரீ (6019)


இறைவனின் அன்புக்கு அழகிய வழி


📙”அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புவது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோஅவர், தம் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்” என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின்அபீகுராத் (ர­லி) நூல்கள்: ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம்: 6.


நபிகளாரின் இறுதி அறிவுரை


📙நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ”நான் அண்டை வீட்டாரிடம் நல்லமுறையில்நடந்து கொள்ள வேண்டுமென வ­யுறுத்துகிறேன்” என்று அதிகமாகக்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ர­லி)நூல்: அல்முஃஜமுல்கபீர்லிதப்ரானீ, பாகம்: 8,பக்கம்: 111


மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

(அல்குர்ஆன் : 4:36)


📙”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                        அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 5187


அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.


📙”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.              அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016                                  

                                                                                      📙அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.


Comments